திருவிருந்துப்பாடல்கள் | வானம் இருந்து வந்து |
வானகம் இருந்து வையகம் எழுந்து எங்கள் இயேசுவே நீர் வாரும் எங்கள் இதயக் கோவிலில் வானம் இருந்து வந்து வையம் எழுந்து வந்த எங்கள் இனிய தெய்வம் இயேசுவே கண்ணில் மகிழ்ச்சி பொங்க நெஞ்சில் எழுச்சி பொங்க உம்மை இதயம் தன்னில் ஏந்துவோம் வாரும் வாரும் எங்கள் இயேசுவே எங்கள் இதயம் என்னும் கோவிலில் வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் ஆண்டவர் உம்மிடமே உள்ளன வல்லவர் நீர் தரும் உணவும் அழியா உணவாய்த் திகழ்கின்றது எம்மிலே நீ வரும் நேரமெல்லாம் அது தேனினும் இனிதாய் இருக்கின்றது லலலல எம்முடன் நீர் எழும் நேரமெல்லாம் அது நிலமில்லா வானமாய் விடிகின்றது உண்மை ஒளியே உணவே உயிரே எழுந்திடுவாய் அன்பே அருளே என்னில் நீயும் கலந்திருவாய் அப்பமதை கரமெடுத்து இது என் திருவுடல் என மொழிந்தீர் திராட்சை ரசம் கரமேந்தி இது என் திருரத்தம் என மொழிந்தீர் உம்முடல் உண்ணும் நாங்களெல்லாம் தினம் எம்முடல் உமக்காய் இழக்க வேண்டும் லலலல உம் இரத்தம் பருகும் நாங்களெல்லாம் தினம் எம் இரத்தம் பிறர்க்காய் சிந்த வேண்டும் உண்மை ஒளியே உணவே உயிரே எழுந்திடுவாய் அன்பே அருளே என்னில் நீயும் கலந்திருவாய் |