திருவிருந்துப்பாடல்கள் | வானம் விட்டு வையம் வந்த |
வானம் விட்டு வையம் வந்த உணவிது வாழ்வை தந்து வாழ சொன்ன உறவிது பசியும் இனி இல்லை தாகம் இனி இல்லை புதிய வாழ்வை நாம் காணவே பயமும் இனி இல்லை பாவம் இனி இல்லை புனித வாழ்வை நாம் காணவே பழைய மன்னா உண்டபோது பசி அகன்றது புதிய மன்னா வந்தபோது பாவம் அகன்றது இதயம் என்னும் கோவிலில் இறைவன் அவர் இருப்பதை உணர்ந்து கொண்டால் உலகினில் கவலை இல்லையே உலக செல்வம் ஒன்றுமில்லை உள்ளம் நினைக்கையில் உயிரின் செல்வம் வந்துசேரும் வாழ்வு நிலைத்திடும் அவரின் அன்பு பாதையில் அமைதி வரும் மனதினில் உணர்ந்து கொண்டால் உலகினில் கவலை இல்லையே |