Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் உயிரே நான் உன்னோடு  

உயிரே நான் உன்னோடு உறவாட வேண்டும்
உள்ளத்தில் நீ வந்து உரையாட வேண்டும்
உலகினில் என் சொந்தம் நீயாக வேண்டும்

ஆறாத துயர் தீர்க்கும் அருமருந்தே
அழியாத வானகத் திருவிருந்தே
வழியாக வா என் வாழ்வினிலே
உயிராக வா என் உடலினிலே
ஒவ்வொரு பொழுதும் உந்தன் நினைவில்
உள்ளம் மகிழ்ந்திடுமே
ஒரு பொழுதேனும் உன்னை மறந்தால்
உயிரும் பிரிந்திடுமே

நீதியின் சுடராய் ஒளிர்பவனே
நிறைவாழ்வை எமக்குத் தருபவனே
ஒளியாக வா என் பாதையிலே
வளமாக வா என் வாழ்வினிலே
நீதியின் இறைவா நேர்மையின் தலைவா
உள்ளம் வாருமே
வான்மழை போல வானக வாழ்வின்
நிறைவைத் தாருமே











 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்