திருவிருந்துப்பாடல்கள் | உயிரான வா என் உறவான |
உயிரான வா என் உறவான வா உளம் வாழ என் அன்பில் உறவாட வா உயர்வாக்க வா என் துயர் போக்க வா உனைத்தேடும் என் நெஞ்சில் குடியேற வா உணவாய் உனையே தந்தாயே வளமாய் பலமாய் நின்றாயே வழியாய் ஒளியாய் என் கண்ணில் வா இனிதாய் புதிதாய் என் சொல்லில் வா பாவச்சிறையிலே தவித்து நின்றேன் பரிகார பலியாகினாய் பாதம் பணிந்து நான் உருகியே நின்றேன் பரிவோடு எனைத் தாங்கினாய் பார்போற்றும் இறைவன் நீயல்லவா பாசத்தால் என்னை ஆட்கொள்ள வா வானம் திறந்து நீர் புவியில் வந்தீர் உயிருள்ள உணவாகவே வாழ்வின் ஒளியை நீர் எனக்குத் தந்தீர் உனைச்சேரும் வழிகாணவே பார்போற்றும் இறைவன் நீயல்லவா பாசத்தால் என்னை ஆட்கொள்ள வா |