Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் உயிராக எனில் வாரும்  
வாழ்வது நா..னல்ல கிறிஸ்துவே... என்னில் வாழ்கின்றார்
கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார்

உயிராக எனில் வாரும் இறைவா என் உள்ளத்தில் உறவாட வா அன்பான அருளான தலைவா என் ஆன்மாவில் மகிழ்ந்தாட வா விழும்போதெல்லாம் கரமாக வா எழும்போதெல்லாம் வாழ்வாக வா வழியெங்குமே ஒளியாக வா என் வாழ்வையே வளமாக்க வா   
           ஆண்டவரின் உடலினையே உணவாய் உண்டிடுவோம் கிறிஸ்துவே 
           என்னில் வாழ்கின்றார் என்றே முழங்கிடுவோம் - 2 ( உயிராக ...)

நிலையில்லா என் வாழ்வில் நிலையாய் வாழ என்னில் வா நிறைவாழ்வு தருகின்ற உணவாய் என்னில் வாழ்ந்திட வா - 2 எனைத்தேடியே வரும் தெய்வமே உனில் வாழவே நான் வாழ்கின்றேன்-2 உம்மைப்போல என்னைப்பகிர அருளைத்தாருமே...2 ஆண்டவரின்....... .

நிதமாக நிலையாக உன்னில் நானும் இணைந்திடவே
உயிராக உறவாக என்னில் நீயும் கலந்திடவா - 2
மன்னா உண்டும் அழிந்தார்களே உம்மை உண்டால் அழிவில்லையே-2 உம் உம்மை என்றும் பிரியாதிருக்க அருளைத்தாருமே... (உயிராக...)












 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்