திருவிருந்துப்பாடல்கள் | உமையன்றி வேறில்லையே |
உமையன்றி வேறில்லையே உமையன்றி வேறில்லையே - இறைவா உமை நாளும் நினைக்காத நாளில்லையே உமையன்றி வேறில்லையே (2) சுமையோடு என் வாழ்வு சுழல்கின்றது துணை தேடி உமை நாளும் அலைகின்றது (2) உளம் மகிழ்வாக உம்முடன் வாழ உமை என்றும் என்னுள்ளம் அழைக்கின்றது நானுயிர் வாழ்வது நிம்மதிக்காக (2) நலிவுகள் ஏற்பது உமக்காக மனம் உமை வேண்டுதல் மறுநிலைக்காக (2) மங்கல வாழ்வே மலர்வாக என் இறை யேசு எனக்குணவாக (2) எனை நாளும் பிரியாத பேரின்பமாக த நி ஸா ஸநிநித தம மக மககரி ரிஸஸநி தநிஸமா கமதநி காரிஸா நீதமா கமதநி ஸா......... நாளொரு காலங்கள் நகர்ந்திடும் போது (2) நதிகளின் சங்கமம் நானாக நாதங்கள் இனிதுடன் முழங்கிடும்போது (2) நலம் தரும் சுவையும் நானாக நீடிய காலம் உமக்கென ஆக (2) நல்லாயன் என் இயேசு என்னோடு வாழ த நி ஸா ஸநிநித தம மக மககரி ரிஸஸநி தநிஸமா கமதநி காரிஸா நீதமா கமதநி ஸா......... |