திருவிருந்துப்பாடல்கள் | உலகாளும் இறைவன் |
உலகாளும் இறைவன் உயர்வான தலைவன் எனைதேடி வரும் நேரமே உணவாக எழுந்து உயிரோடு கலந்து உறவாட வரும் நேரமே மறைவான பொருளை நிறைவான அருளை குறையாமல் பெறும் நேரமே இது வாழ்வு மலரும் நல்நேரமே புது கவிபாடும் என்ஜீவனே எரிகின்ற திரி தன்னுள் அனல் தாங்குமே - அதில் தெரிகின்ற ஒளிதன்னில் இருள் நீங்குமே நடமாட தடமாகும் வழி காணுமே உம் தியாகத்தால் இறைவா நான் உயிர் வாழ்கிறேன் அடிக்கின்ற வரை கல்லின் கலை தூங்குமே - அதை வடிக்கின்ற நிலை கண்ணில் சிலை தோன்றுமே விலையான வலியாவும் புகழாகுமே உம் தியாகத்தால் இறைவா நான் உயிர் வாழ்கிறேன் |