Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் திருவிருந்து புதுவிருந்து  


திருவிருந்து புதுவிருந்து
இறைமகன் இயேசுவின் அருமருந்து
அருளமுது இதை அருந்து
ஆயன் இயேசுவே தரும் விருந்து

இந்த விருந்தில் கலந்திடுவோம்
புது உறவென மலர்ந்திடுவோம்
அன்பு பரமனைத் தொழுதிடுவோம்
அளவில்லா நலம் பெறுவோம்
உண்மை நேரமை நன்மை உருவாய்
உதித்தவரை புகழ்வோம்

உருக்களைந்து உயிர் துறந்து
எம் உடலை எமக்காய் தந்தாய்
வலுவிழந்து வரம் பொழிந்து
புது வாழ்வை கொடையாய் அளித்தாய்
புகழ்ச்சி கீதம் பாடியே வந்தோம்
எந்தன் நெஞ்சில் நீ வருவாய்
உறவு தீபம் ஏந்தியே வந்தோம்
உள்ளம் வந்து தங்கிடுவாய்
நல்விருந்து இது நமக்கென்றும்
இதை அருந்திடத் தினம் வருவோம்

விழி காக்கும் இமை போல
எமைத் தாங்கும் இறைவன் நீரே
பழி சொல்லும்இவ்வுலகில்
வழி காட்டும் துணைவன் நீரே
மன்னா தந்த மன்னவா உம்மை
மண்ணில் ஏற்று மகிழ்கின்றோம்
விண்ணை ஆழும் தலைவா உம்மை
நெஞ்சில் தாங்கி புகழ்கின்றோம்
நல்விருந்து இது நமக்கென்றும்
இதை அருந்திடத் தினம் வருவோம்









 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்