திருவிருந்துப்பாடல்கள் | திருரத்தம் இறைவா |
திருரத்தம் இறைவா உந்தன் நினைவாகுதே திருவுடலும் பகிர்வாகுதே உணவாகுதே உன் வார்த்தை மொழி கேட்குதே என் ஆன்மா நலமாகுதே விண்ணக வாழ்வை தருகின்ற உன்னதர் இயேசுவின் விருந்தானதே என்னகம் வாழ்ந்திட வருகின்ற உன்னில் மனம் மகிழ்வாகுதே உயிரும் உயிர்ப்பும் ஆனவரின் உறவில் இணையும் உணவாகுதே வழியும் ஒளியும் ஆனவரின் வரங்கள் பெறவே துணையாகுதே உடலும் மனமும் ஒன்றாகுதே உம்மிலே பணிவாகுதே உலகம் முழுதும் உனைபாடவே உழைப்புகள் எனதாகுமே இனி வாழ்வது நானல்லவே எனில் வாழ்வது நீயல்லவா விண்ணக வாழ்வை தருகின்ற உன்னதர் இயேசுவின் விருந்தானதே என்னகம் வாழ்ந்திட வருகின்ற உன்னில் மனம் மகிழ்வாகுதே அவரை அறியும் ஆவலுடன் அருந்தும் பொழுதில் இனிதாகுமே அமைதி உருவாய் ஆனவரின் அருளை பெறவே துணையாகுமே அழியா உணவாய் நிலையாகவே அணையாத சுடராகவே இமைகள் திறந்து எனைகாணவா இதயத்தை நீ ஆளவா புது பூவுடன் நார் போலவே உனில் சேர்ந்திட நான் ஏங்கினேன் விண்ணக வாழ்வை தருகின்ற உன்னதர் இயேசுவின் விருந்தானதே என்னகம் வாழ்ந்திட வருகின்ற உன்னில் மனம் மகிழ்வாகுதே |