திருவிருந்துப்பாடல்கள் | சுடர் விடும் அன்பே வருக |
சுடர் விடும் அன்பே வருக சுவை தரும் கனியே வருக படரொளி விளக்கே பவித்திர அழகே வருக வருக வருக கற்பனை கடந்த ஜோதியே வருக கருணையே உருவாம் விளக்கே வருக அற்புதக் கோல ஆதியே வருக அருமறை வேத ஆண்டவா வருக வருக வருக வருக அருளொளி விளக்கை ஆணவம் எனுமோர் இருளற என்னுள் ஏற்றிட வருக துன்புறு தத்துவத் துரிசெல்லாம் நீக்கி இன்புற நான் இனி வாழ்ந்திட வருக வருக வருக வருக ஒளியில்லையானால் மலர் விரிவில்லை ஒளியில்லையானால் உடல் வாழ்வு இல்லை நீயில்லையானால் மனமகிழ்வில்லை நீயில்லையானால் உயிர் வாழ்வு இல்லை வருக வருக வருக |