திருவிருந்துப்பாடல்கள் | எ |
ஒரு கோடி தேன் பூக்கள் ஒன்றாக மணம் வீசும் என்னுள்ளம் நீ வாழும் பூங்காவனம் மன மென்னும் பொன் வண்டு உன்னன்பில் கட்டுண்டு தமிழாலே கவிபாடும் பேரானந்தம் சிறகுகளால்....... என் மனம் என் மனம் விரிகிறதே.......... பறந்திட பறந்திட இறை உறவில்........... இணைந்திட இணைந்திட மகிழ்கிறதே............ நம்தன நம்தன வாராயோ பேரன்பே என் ஏசுவே தாராயோ பேரின்பம் என் வாழ்விலே-2 உன்னன்பில் என் கண்கள் கடலானதே என் வானில் விண்மீன்கள் ஒளிவெள்ளமே -2 உன்னோடு ஒன்றாகும் பொன்னாளிதே என் வாழ்வில் ஏதேதும் இதற்கில்லையே நீ வேண்டுமே. நிதம் வேண்டுமே நிஜமான உன் அன்பு துணை வேண்டுமே வா மன்னனே.. என் வேந்தனே நிலைவாழ்வு தருகின்ற இறை மைந்தனே என் கால்கள் இறை வார்த்தை வழி செல்லவே என் வாழ்வில் விளக்காக வரவேண்டுமே -2 உயிர் மூச்சு நீதானே என் தெய்வமே உனையன்றி எனக்கிங்கு வாழ்வில்லையே நீ வேண்டுமே. நிதம் வேண்டுமே நிஜமான உன் அன்பு துணை வேண்டுமே வா மன்னனே. என் வேந்தனே நிலைவாழ்வு தருகின்ற இறை மைந்தனே. ஒரு கோடி தேன்..... ஆ ஆ அ ஆ ஆ அ ஆ ஆ அ அ ஆ -4 |