திருவிருந்துப்பாடல்கள் | நெஞ்சத்தில் தூய்மையுண்டோ |
நெஞ்சத்தில் தூய்மையுண்டோ யேசு வருகின்றார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே யேசு அழைக்கின்றார் வருந்திச் சுமக்கும் பாவம் - நம்மைக் கொடிய இருளில் சேர்க்கும் செய்த பாவம் இனிப்போதும் அவர் பாதம் வந்து சேரும் - 2 (நெஞ்சத்திலே) குருதி சிந்தும் நெஞ்சம் - நம்மைக் கூர்ந்து நோக்கும் கண்கள் - 2 அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் அவர் பாதம் வந்து சேரும் - 2 (நெஞ்சத்திலே) சிலுவை சுமந்த கரங்கள் - நம்மை வாழவைக்கும் கரங்கள் இறைவாழ்வு நம்மில் மலர அவர் பாதம் வந்து சேரும் - 2 (நெஞ்சத்திலே) |