Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் நீங்காத மறையே நீ  

நீங்காத மறையே நீ எனையாள வாராய்
கலையாத கனவாக எனில் உறைய வாராய் 2
வாழும் தெய்வம் நீரே என்று உள்ளம் பாடுதே
உந்தன் வருகை தஞ்சம் என்று நெஞ்சம் நாடுதே 2
வா தேவா நீர் என்னில் வாழ
வா வானவா எம் மண்ணை ஆளவா 2

உந்தன் வேதம் தேசம் பேசும் மனதோடு மனம் சேரவா
கண்கள் தேடும் என் சோகம் தீரும்
நலம் காண வளம் காணவா 2 ஆ.. ஆ
ஒருநாளும் ஒருபோதும் மறவாத தெய்வமே
மறுத்தாலும் வெறுத்தாலும்
விலகாத தெய்வமே 2 (வா தேவா)

பந்தம் மாறும் பாசம் தீரும் மாறாது உன் நேசமே
விழிகள் தேடும் என் வழிகள் யாவும்
என் தேடல் நீர்தானய்யா 2
உறவின்றி உனைத்தானே உலகில் நான் பார்க்கிறேன்
தமிழோடு தவழ்ந்தாலும்
தாயன்பை பார்க்கிறேன் - 2 (வா தேவா)











 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்