திருவிருந்துப்பாடல்கள் | இயற்கையின் அழகில் |
இயற்கையின் அழகில் எழுந்திடும் இறைவா என்னுள்ளம் கலந்திட நீ வரவேண்டும் பூப்போன்ற உளதுள்ளம் சுகமான சிந்தையிலே இன்னிசையே இறையமுதே என்னில் கலந்திட நீ வரவேண்டும் தூயகம் என்னிலே எந்நேரம் துயர்களெல்லாம் மறைந்தோடும் செவ்வானம் பார்வையாலே சுமையெல்லாம் சுகமாகும் இயேசுவின் பாதம் ஞானமென்றால் இறைவனின் திருவுளம் என் மனதில் இனியவனே இறைமகனே உன்னில் கலந்திட நீ வரவேண்டும் வாடிய பயிராய் நானிருக்க வான் மழையாய் நீ வரவேண்டும் தடம் புரண்டு நான் திகைக்க வழித்துணையாய் நீ இருப்பாய் செல்வங்கள் எல்லாம் வெறுமையென்றே உன் அன்பே போதுமென்றே தேன்மொழியே என் வழியே என்னுள் கலந்திட நீ வரவேண்டும் |