Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் இறைவன் தரும் திருவிருந்து  

தொகையறா
இறைவன் நமக்களிக்கும் திருவிருந்து
நம் ஆன்மாவை காக்கின்ற அரும் விருந்து
மாபரன் இயேசுவில் எந்நாளும் வாழ்ந்திட
[ நமக்கென்றும் உயிராகும் அரும் மருதந்து ] -2

பல்லவி
இறைவன் தரும் திருவிருந்து நம்
ஆன்மாவை காக்கின்ற விருந்து -2
திருவுணவாய் நாம் உண்போம் -2
நமக்கென்றும் உயிராகும் அரும் மருந்து -2

அனுபல்லவி
அன்பாய் நாமும் உண்போமே
அன்பர் இயேசுவின் திருவுடலை
என்றும் அவரில் வாழ்வோமே
நிறைவாய் மகிழ்ச்சி கொள்வோமே -2


சரணம்
கொடுக்க மனம் இன்றி வாழ்ந்து விட்டேன்
உம்மை கண்டதும் அறிந்து கொண்டேன்
யாரும் இல்லை என்று இருந்து விட்டேன்
உம்மை உண்டதும் உளம் நிறைந்தேன் -2
இறைவா நீ என் வாழ்வு
என்றும் உன்னில் தஞ்சம்
உனை மறவாமல் எந்நாளும் [வாழ்ந்திடுவேன்] -2


இயேசு நமக்களித்த திருவுணவு
நம்மை ஆட்க்கொள்ளும் அருள் உணவு
வாழும் மாந்தருக்கு மனம் உவந்து
தன்னைத் தருகின்றார் உயிர் துறந்து -2
அவரால் நாம் என்றும் வாழ்வோம்
அவரில் நாம் இணைந்து மகிழ்வோம்
இனி நாளெல்லாம் அவர் நினைவில் [ நிலைத்திடுவேன் ] -2

அன்பின் நிலை வாழ்வை நமக்குத் தந்தார்
அவர் வார்த்தையைக் கேட்டிடுவோம்
பண்பும் பணிவோடு பின்தொடர்ந்து
அவர் வழிதனில் நாம் நடப்போம் -2
விண்ணகத் தந்தைக்கு மகிமை
மண்ணக மாந்தர்க்கு அமைதி
அவர் புகழ் பாடி நாம் தினமும் [ மகிழ்ந்திடுவோம் ] -2













 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்