திருவிருந்துப்பாடல்கள் | எந்தன் உள்ளம் வாரும் |
எந்தன் உள்ளம் வாரும் இயேசுவே என்னை என்றும் ஆளும் இயேசுவே (2) தீமை என்றும் ஒழியுமே நன்மை என்றும் வாழுமே -2 நிறைவாய் வாழ உறவைத் தந்து எழுந்து வாருமே உலகினில் பகிர்ந்து வாழும் மனநிறைவைத் தாருமே வாழ்வினில் இருளைப்போக்கும் ஒளியை என்றும் தாருமே (2) தாழ்விலும் சோர்விலும் எனைக் காத்திடுவாய் உறவினில் வளர்ந்திட உன்னருள் பொழிவாய் (2) உந்தன் தரிசனம் கிடைத்து மகிழ்ந்து உயிரில் கலந்து நிலைத்து வாழ உள்ளத்தின் விதைகள் யாவும் பயிர்களாக மாற்றுமே உண்மையின் வழியில் செல்ல தடைகள் யாவும் மாற்றுமே (2) ஞானமும் தியானமும் கலந்திட வருவாய் நீதியும் நேர்மையும் நிலைத்திட வருவாய் (2) உந்தன் வழியினில் நானும் சென்று போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்து வாழ |