திருவிருந்துப்பாடல்கள் | என் நெஞ்சில் வா |
என் நெஞ்சில் வா என் யேசுவே என உள்ளம் வா என் தேவனே உயிராய் வா.... உணவாய் வா.... வழியாய் வா.... வாழ்வாய் வா..... வானின்று வந்த உயிருள்ள உணவே வாழ்வாங்கு வாழ உயிரூட்ட வந்தேன் எல்லார்க்கும் எல்லாமாய் திகழ்ந்திடும் அருளே எந்நாளும் வழிகாட்டும் மழையான ஒளியே சுமையோடு வருவோர்க்கு சுமை தாங்கி நீரே பசித்தோர்க்கு விருந்திட்டு காப்பவர் நீரே தனியாகத் தவிப்போர்க்கு துணையாளர் நீரே தடுமாறும் மாந்தர்க்கு நீதானே வழியே மரியாளின் உதரத்தில் கனிந்திட்ட தேவா மங்காத அன்பாலே எமை மீட்ட நாதா நாள்தோறும் உனை நாடி நிறைவோடு வாழ நம்பிக்கை எம் வாழ்வில் வளர்த்திட வா வா |