Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இறைவனில் சங்கமம்

திருவிருந்துப்பாடல்கள் என் அன்பு இறைவா  

என் அன்பு இறைவா எனையாளும் தலைவா
எழுந்திங்கு வந்தருள்வாய் - எம்மை
ஆட்கொண்டு அருள்புரிவாய்

மாறரத அன்பும் மறுவில்லா நேசமும்
உருக்கொண்ட நாயகனே - இறைவா
உருக்கொண்ட நாயகனே
உனதெழில் சாயலாய் உலகினில் வாழ்ந்திட
உயிர் ஈந்த ஆண்டவரே - எமக்காய்
உயிர் ஈந்த ஆண்டவரே
உன்னோடு இணைந்து உன்னில் நான் கலந்து
உறவாட வரமருள்வாய் - இறைவா
உறவாட வரமருள்வாய்

மன்னாவைப் பொழிந்து மண்ணோர்க்கு வாழ்வை
வழங்கிய ஆண்டவனே - தினமும்
வழங்கிய ஆண்டவனே
தடைகளைத் தகர்த்து வாக்களித்த நாட்டிலே
வாழ்ந்திடச் சேர்த்தவரே - இறைவா
வாழ்ந்திடச் சேர்த்தவரே
உன்னோடு கலந்து உறவாடி மகிழ
உன்னருள் தந்தருள்வாய் - இறைவா
உன்னருள் தந்தருள்வாய்










 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்