திருவிருந்துப்பாடல்கள் | எ |
என் இதயக்கோவிலில் என் இறைவா எழுந்து வா என் ஆன்ம உணவாய் என் உள்ள உறவாய் என் உள்ளம் எழுந்து வா இறைவா -2 என்னுள்ளம் எழுந்து என் வாழ்வில் கலந்து என்னோடு வாழ வா (2) அன்பே அருளே ஆருயிரே என்னுள்ளம் எழுந்து வா புதுமை வாழ்வின் தெள்ளமுதே என்னுள்ளம் எழுந்து வா அப்பத்தின் வடிவில் என் ஆயன் இயேசுவே என்னுள்ளம் எழுந்து வா (2) என்னுள்ளம் எழுந்து வா இறைவா - 2 நீதி நேர்மை உண்மையே என்னுள்ளம் எழுந்து வா வாய்மை வளமை இன்பமே என்னுள்ளம் எழுந்து வா இரசத்தின் ஊற்றாய் என் ஜீவன் இயேசுவே என்னுள்ளம் எழுந்து வா (2) என்னுள்ளம் எழுந்து வா இறைவா - 2 |