திருவிருந்துப்பாடல்கள் | ஆறுதலின் தெய்வமே |
ஆறுதலின் தெய்வமே அரவணைக்கும் யேசுவே தேடி வந்தோம் உந்தன் தஞ்சமே வாரும் என் இயேசுவே நீர் என்னில் வந்தால் வாழ்வு மாறுமே மூங்கிலாய் நானிருந்தேன் காற்றாய் நீ நுழைந்தாய் வேரென எனக்குள் வந்து மரமாய் வளர்ந்து விட்டாய் துன்ப துயரங்கள் என்னைச் சூழ்கையில் துணையாய் வாருமே தடைகள் போக்குமே வாரும் என் இயேசுவே நீர் என்னில் வந்தால் வாழ்வு மாறுமே தரிசாய் நானிருந்தேன் நிலமாய் மாற்றி விட்டாய் வாரும் என் இயேசுவே நீர் என்னில் வந்தால் வாழ்வு மாறுமே சருகாய் நானிருந்தேன் தளிராய் மாற்றிவிட்டாய் சொந்த பந்தங்கள் என்னைப் பிரிகையில் உறவாய் வாருமே பிரிவைப் போக்குமே |