Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   898-வைகறைப் பொழுதின் வசந்தமே  
வைகறைப் பொழுதின் வசந்தமே நீ வா
விடியலைத் தேடும் விழிகளில் ஒளி வா
வாழ்வு மலர்ந்திட வான் மழை என வா
வழியிருளினிலே வளர்மதியென வா - இங்கு
பாடும் இந்த ஐpவனிலே பரமனே நீ வா (வைகறை)

அலைகளில்லா கடல் நடுவே பயணமென என் வாழ்வு
அமைதி எங்கும் அமைதியென பயணமதை நான் தொடர - 2
இறைவா என் இறைவா இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய்
எந்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து
எனை அணைத்திட வா (வைகறை)

இடர்வரினும் துயர்வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும்
எனைப்பிரியா நிலையெனவே இணைபிரியா துணையெனவே
இறைவா என் இறைவா இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய்
என்தன் வாழ்வு ஒளிர வாசல் திறந்து
எணை அணைத்திட வா (வைகறை)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்