897-விண்ணோரும் விரும்பித் தேடும் |
விண்ணோரும் விரும்பித் தேடும் வானமுதே எங்கள் முன்னோரின் பசி தீர்த்த வழித்திருவே உடலாய் உனைக்கண்டு திரு உணவாய் அதை உண்டு வாழும் காலமெல்லாம் உம்மோடு வாழ்ந்திட வாழும் காலமெல்லாம் நான் உம்மோடு வாழ்ந்திட வாரும் வாருமே இயேசு தெய்வமே வாரும் வாருமே இயேசு தெய்வமே கனிதரும் மரமாய் - நான் பயன் தரவே சருகாய் உதிர்ந்தாலும் - நான் உரமாகிடவே விதையாய் விழுந்து - நீ என்னில் விளைந்திட விண்ணாளும் தேவா நீ மன்னா..வாய் வா - மன்னா...வாய் வா நிறையுறவினையே தினம் தரும் திருவிருந்தே குறை போக்கிடவே வாரும் அருமருந்தே புதியதோர் உலகம் விரைவாய் விடிய நிலைவாழ்வதனை நித்தம் நீதர வா - நித்தம் நீதர வா |