Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   896-விண்ணக விருந்தே என்னில் வா  
விண்ணக விருந்தே என்னில் வா
என்னகம் வாழ இறங்கிவா (2)
மண்ணக மீட்பின் மாண்பே வா
மாபரனே மீட்க வா
அகிலம் ஆளும் தெய்வ உணவே நீ
அன்பைத் தரும் அமுத உணவே நீ
எழுந்து வாராயோ என்னில் வாராயோ

மன்னா உணவே மண்ணிலே வந்தாய்
உண்பவர் வாழவே
நித்திய வாழ்வில் நிலைபெறவே
உணவைத் தந்தாயே
இது உன் உடல் அன்றோ
வாழ்வு மாறும் அன்றோ
இது உன் இரத்தம் அன்றோ
தாகம் தீரும் அன்றோ
இயேசுவே நீர் வரவேண்டும்
என்னையும் மாற்றிட வேண்டும்
உலகம் வாழ்வதற்காக
என்னையே நான் தரவேண்டும்

வானம் இறங்கி வந்த மழையாய்
வாழ்வு நனையவே
கானம் இசைந்து உந்தன் புகழை
என்றும் பாடவே
எனது சதை என்றாய்
உண்மையின் உணவென்றாய்
எனது இரத்தம் என்றாய்
உண்மையின் பானம் என்றாய்
வார்த்தையே வாழ்ந்திட வேண்டும்
வல்லமை நான்பெற வேண்டும்
வறுமை இல்லா வாழ்வு
வந்திட தியாகம் வேண்டும்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்