895-விண்ணின் வேந்தனே |
விண்ணின் வேந்தனே மண்ணின் மைந்தனே உள்ளத்தில் பிறந்திடவா உயிரின் முதல்வனே உறவின் தலைவனே இதயத்தில் மலர்ந்திடவா சோகம் நீக்கிடவா தாகம் தணித்திட வா - என் வாழ்வில் இணைந்திட வா வசந்தத்தைத் தந்திட வா என் வாழ்வில் நீ சேர்ந்தால் ஏக்கங்கள் தீரும் பதட்டங்கள் பறந்தோடிப் போகும் அரணாக எனை நாளும் காக்கும் அன்பான உம் வார்த்தை போதும் இதயங்கள் மகிழப் பணித்திடுவீர் எண்ணங்கள் உயர வந்திடுவீர் எம் வாழ்வின் உயிரூற்றும் அடைக்கலமும் நீரே மீட்பளிக்கும் முதற் கனியும் நீரே மறுவாழ்வின் முன்சுவையைத் தந்தீர் மனுக்குலமும் உயிர் வாழச் செய்தீர் எம் உள்ளமும் உம் புகழ் பாடிடுதே உதயம் எம்மில் தோன்றிடுதே |