Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   894-விண்ணில் வாழும் இறைவா  
விண்ணில் வாழும் இறைவா
என்னில் வாழ நீ வா
மண்ணில் காணா மகிழ்வை
உன்னில் காண வரம் தாராய்

மனதில் ஆயிரம் நினைவுகள் எழுந்தாலும்
மன்னா உந்தன் நினைவே இன்பமையா
கள்ளமில்லா நெஞசோடு
கலகம் இல்லா சொல்லோடு
விளங்கிட விடிந்திட விடியலின் தேவா வாரும்

வானும் மண்ணும் கடலும் மறைந்தாலும்
இறைவா உந்தன் உறவே மறையாதே
தகுதியில்லாதவன் என்றாலும்
தந்தையின் பிள்ளை என்பதனால்
உயர்ந்திட வளர்ந்திட உணவாய் தேவா வாரும்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்