Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   893-விருந்துக்கு வாருங்கள்  

விருந்துக்கு வாருங்கள்
நம் இறைவன் தரும்
அன்பை உணர்த்தும் உறவை வளர்க்கும்
விருந்துக்கு வாருங்கள் - திரு
விருந்துக்கு வாருங்கள்

மண்ணோரை நல் மனத்தோராய் மாற்றும் நல்
விருந்துக்கு வாருங்கள்
விண்ணோரை வாழ்வில் எந்நாளும் ஏற்கும்
விருந்துக்கு வாருங்கள்
தாழ் நிலை நீக்கி இறையுறவைத் தரும்
விருந்துக்கு வாருங்கள்
தாழ்நிலை சூழ்ச்சியின் சாத்தானை வெல்லும்
விருந்துக்கு வாருங்கள்

ஒற்றுமை உணர்வை நம்மிலே வளர்க்கும்
விருந்துக்கு வாருங்கள்
வேற்றுமைத் தீயை மனத்தினில் நீக்கும்
விருந்துக்கு வாருங்கள்
மன நோய் அகற்றி நிறை மகிழ்வளிக்கும்
விருந்துக்கு வாருங்கள்
மரணத்தை வென்று இறை வாழ்வளிக்கும்
விருந்துக்கு வாருங்கள்







 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்