Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   892-விருந்திது விருந்திது  


விருந்திது விருந்திது இறைவன் தந்தது
விடுதலை வாழ்வினை வழங்க வந்தது
புவியில் நிதம் சேரும்
மனங்கள் புதிதாகும்
பகைமை சுவர் வீழும்
பகிர்வு புவி வாழும்
உடலை உண்டு உறவில் இணைய
இறைவன் உடலாகும்
உலகம் இறைவன் உடலாகும்

இறைவன் அவரை நம்பும் வாழ்வில் குறைகள் இல்லையே
பாலை நிலத்தின் மன்னா உணவு சொன்ன உண்மையே
கேட்கும் முன்பே தேவைகள் அறிந்து அருளும் தெய்வமே
கேட்கும் தனது பிள்ளை வேண்டல் கேட்க மறப்பாரோ


இறைவன் தந்தை உலகம் பிள்ளை உறவு வாழுமே
எளியோர் உறவில் இயேசு அமர்ந்த விருந்தின் பாடமே
உயிரை ஈந்து உலகையே இணைத்த அன்பின் தெய்வமே
உயர்வு தாழ்வு உலகில் மறைய உறுதி தருவாரே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்