891-விருந்து ஒன்று தருவதற்கு |
விருந்து ஒன்று தருவதற்கு வீதி வந்து அழைக்கின்றார் விரைந்து வாரும் ஏழை நண்பரே சமபந்தி அமர்ந்து யேசுவோடு இணைந்து பகிர வாரீரோ நண்பரே - நீர் பகிர வாரீரோ நண்பரே விருந்து உண்ண அழைக்கப்பெற்றோர் விலகி ஓடிச் சென்று விட்;டார் அழைக்கப் பெற்றோர் விருந்து உண்டு அன்பின் அரசில் நுழைந்திடுங்கள் உன் மனதை நீர் மாற்றிடுவீரே ஆண்டவரை ஏற்றிடுவீரே தாகமாக இருப்போரே நீர் நிலைக்கு வாருங்கள் காசு பணம் இல்லாரே நீங்களுமே வாருங்கள் நல்றுறவினையே யேசு தருகின்றார் நலம் பெற்று வாழ்வடைவீரே |