890-விருந்து அன்பு விருந்து |
விருந்து அன்பு விருந்து - அது அழியா வாழ்வின் விருந்து அருந்து சேர்ந்து அருந்து - நம் பாவங்கள் போகும் பறந்து எல்லோரும் வாழ்வுபெற அன்று கல்வாரி மலைமீது - 2 நல்லோராம் இறை மகனார் - தம் நல்லுயிர் ஈந்தாரே அந்த நன்னாளின் சாட்சியிது இன்று கல்வாரிக் காட்சியிது அன்புக்கு ஆதாரம் - உயர் பண்புக்கு ஓர் பாடம் - 2 விண்ணிற்கு ஓர் பாலம் - அருள் மண்ணுக்கு ஏராளம் - இது துன்பத்தின் முடிவாகும் - வான் இன்பத்தின் சுவையாகும் |