889-வானின்று வந்த உயிருள்ள |
வானின்று வந்த உயிருள்ள உணவே வாராய் எம் நெஞ்சிலே - இயேசுவே வாராய் எம் வாழ்விலே உயர்ந்து வளர்ந்து கனிந்து குலுங்கும் திராட்சைக் கொடியே உன்னிலிணைந்த உயிர்களெல்லாம் உனது நற்கனியே (2) உனது உறவுன்றி எம்மால் எதுவும்; முடியுமோ (2) உனது வழியை மறந்தால் மனம் அமைதி பெறுமோ உருகி உருகி கனிந்து வந்த உன்னத அன்பே உடனிருந்து வழி நடத்தும் ஆனந்தத் தென்பே (2) பெருகிப் பொங்கும் உன்னருளில் தாகம் தீர்வோம் (2) வருக வருக எம்மில் வளங்களெல்லாம் பெருக விண்ணக மாண்பே துறந்து வந்து எங்களுக்காக (2) அடிமையென பணி புரிந்த ஆருயிரன்பே தன்னைத் தாழ்த்தி உயர்வடைந்த உலகின் ஒளியே (2) உன்னைப்போல பரிவும் பணிவும் எம்மில் தருக |