888-வானக அப்பமே வரவேண்டும் |
வானக அப்பமே வரவேண்டும் - இவ் வையக உணவே வரவேண்டும் விண்ணக உறவைத் தரவேண்டும் - நான் உன்னுடன் வாழும் வரம் வேண்டும் உள்ளத்தில் உனக்குக் கோவில் செய்தேன் - அதில் உயர்ந்த கோபுரம் கட்டி வைத்தேன் - 2 அன்பெனும் விளக்கை ஏற்றி வைத்தேன் - 2 - அங்கு வாழ்ந்திட மன்னவா வரவேண்டும் - 2 வரவேண்டும் வரவேண்டும் தந்தையின் உறவை நாடி நின்றேன் - எந்தன் தன்னலம் தவிர்க்க அன்பைக் கேட்டேன் - 2 எந்தையின் உறவின் பாலமாக - எந்தன் சொந்தமாய்ச் சுதன் நீ வர வேண்டும் - 2 வரவேண்டும் வரவேண்டும் |