886-வாழ்வு தரும் விருந்தினை |
வாழ்வு தரும் விருந்தினை சுவைக்க வாருங்கள் வழிகாட்டும் வார்த்தையினை உணவாக்குங்கள் வாழ்வு வழி ஒளியும் - உண்மை அன்பு உயிரும் இறை உணவாய் அருந்த வாருங்கள் அவர் வாழ்வினையே வாழ்ந்து காட்டுங்கள் வாழ்வென்பது மலர் படுக்கை போன்ற இன்பமுமில்லை இயேசு வழியென்பது.. மனம் போன வாழ்க்கையுமல்ல இயேசு வழி நம் வாழ்வாய் மாற வேண்டாமா உலகவாழ்வு மனதை மயக்கும் சோதனை அல்லவா இயேசு வழி தேடும் மக்களே - இறை வார்த்தை வாழ்வாய் ஆக்கும் மக்களே வாழ்வு வழி ஒளியும் - உண்மை அன்பு உயிரும் இறை உணவாய் அருந்த வாருங்கள் அவர் வாழ்வினையே வாழ்ந்து காட்டுங்கள் சாதனை உலகில் இரவில்லா நாளுமல்ல அதில் நிறைவு என்பது நிலையான சொத்தும் அல்ல சிலுவையில்லா இயேசு வழியில் செல்ல முடியுமா சுமைகளில்லா இன்ப போதை மரணம் அல்லவா சுமைகளில் சுகம் காண வாருங்கள் தியாக தீயாய் மாற வாருங்கள் வாழ்வு வழி ஒளியும் - உண்மை அன்பு உயிரும் இறை உணவாய் அருந்த வாருங்கள் அவர் வாழ்வினையே வாழ்ந்து காட்டுங்கள் |