885-வாழ்வின் ஊற்றே நீ |
வாழ்வின் ஊற்றே நீ வான் விருந்தே வானோர் தேனமுதே வாருங்கள் என்னிடம் என்றழைத்தீர் வந்தோமே உன் பதமே (2) எம்மிடை என்றும் வாழ எமக்கே உன்னைத் தந்தாய் (2) கொடைகள் அத்தனையும் கொடுக்கும் வள்ளல் நீரே வரங்கள் பொழிவாயே சுரங்கம் உன் இதயம் அருளைத் தருவாயே அன்பனே ஆண்டவனே தெய்வீகம் மறைத்தவா மண்ணகம் வந்த தேவா (2) விண்ணகம் சேர்ந்திடவே நின் அருள் தந்தவரே எம்மிடை எழுவீரே வேந்தனே எம் இறைவா அன்பினால் என்னையாளும் ஆண்டவா வந்திடுவாய் |