884-வாழ்வில் இனிமை வழங்கும் |
வாழ்வில் இனிமை வழங்கும் கனியே வளமாய் எம்மில் தவழ்க இயற்கை சுமந்த கனி செய்வினையாம் இருளின் துயரம் விலக இறைவன் உவந்து வழங்கும் கனியாய் அருளைப் பொழிந்தே வருக தூய்மை அமுதம் துளிக்கும் மலராய் துலங்கும் இறைவா வருக தேய்வு தொடரா புதுமை நிலவாய் திகழும் வாழ்வைத் தருக தனிமை நலிந்து இனிமை பொழிந்து புதிய இதயம் பெறவே புனிதர் சுவைக்கும் இனிய விருந்தால் கனிவாய் எழுந்தே வருக |