Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   883-வாழ்வாக நீ மாறவேண்டும்  
வாழ்வாக நீ மாறவேண்டும் - எந்தன்
உள்ளங்கள் உனைப் பாடவேண்டும் - 2

வளர்பிறையே எந்தன் வாழ் உயிரே
வரமருளே நின்னை தொழுதுயர
எந்நாளும் உனை நாடி
வளர்ந்து வரும் கொடி போல

எளிமையிலும் ஏழ்மையிலும்
ஏதோ வாழும் வாழ்க்கை
விம்மியழும் நெஞ்சங்களாய்
கண்ணீர் கதைகள் கூறும்
காலமெல்லாம் மிதந்து வரும்
கடவுள் கருணை என்றும்
சோகமெல்லாம் நீங்கியென்னை
சொந்தமாக மாற்றும் - 2

இன்னிசை வெள்ளமெனப் பொங்கும்
எந்தன் உள்ளம்
ஆறாகப் பாய்ந்து வரும்
இன்ப ஊற்றாய் மாறும்
வறியோரின் வாழ்வினிலே
வசந்தம் என நிலவும்
வாடும் முகம் தேடி இன்று
அன்பை இனிதே பொழியும் - 2




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்