Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   882-வாழ்வாக நீயாக வேண்டும்  
வாழ்வாக நீயாக வேண்டும்
இறைவா இறைவா
நீயாக நான் மாறவேண்டும் (இறைவா) - 2

அலையாய் ஓயாமல் உனைத் தொட வந்தேன்
கனிவாய் எனை நீ அரவணைத்திருந்தாய் (2)
வறண்ட நிலமாக நான் காத்திருந்தேன்
வாழ்வின் மழையாய் இதயம் சேர்ந்தாய்
தாய் தந்தை மறந்தாலும் நீ என்னை மறவாமல் - 2
தேடி வந்தாய் புதுவாழ்வு தந்தாய்

இறைவா உன் அன்பு உயிரினும் உயர்ந்தது
உம்புகழ் எந்நாளும் என் நாவில் ஒலிக்கும் (2)
உந்தன் பெயர் சொல்லி என் கரம் உயரும்
நெஞ்சம் நிறையும் உந்தன் விருந்தால்
தாய் தந்தை மறந்தாலும் நீ என்னை மறவாமல் - 2
தேடி வந்தாய் புதுவாழ்வு தந்தாய்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்