Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   880-வாழ்வது நானல்ல - என்னில்  
வாழ்வது நானல்ல - என்னில்
கிறிஸ்துவே வாழ்கின்றார் - 3

இறைவன் என்னில் உறைகின்றார்
இன்பம் எனக்குத் தருகின்றார் (2)
அன்பும் அருளும் பொழிகின்றார் - 2
என்னை முழுதும் ஆள்கின்றார்

உயிரும் உடலும் போலவே
மலரும் மணமும் போலவே (2)
யாழும் இசையும் போலவே - 2
வாழும் இறையில் ஒன்றிப்போம்

கிறிஸ்து நம்மில் வளரவே
நாமே தேய்ந்து மறையவே (2)
கிறிஸ்து நம்மில் வாழவே - 2
நமக்கு பயமே இல்லையே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்