Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   825-வாழ்வது நானல்ல என்னில்  
வாழ்வது நானல்ல - என்னில்
இயேசு வாழ்கின்றார்
அழைப்பவர் அவர் பின்னே - நாம்
சென்றால் மகிழ்கின்றார் (2)

இலவசக் கொடையே அழைப்பு - அது
அன்புப் பணிகளின் உழைப்பு (2)
வாழ்வினை மாற்றி அமைத்து
விசுவாசம் ஏற்பது சிறப்பு (2)
விசுவாசம் ஏற்பது சிறப்பு

இயேசு வளர்ந்திட வேண்டும் - நாம்
என்றும் குறைந்திட வேண்டும் (2)
குறைவதில் இறைவன் நிறைவான்
மனிதனின் பணிகளில் வளர்வான் (2)
மனிதனின் பணிகளில் வளர்வான்
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்