Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   878-வாழ்நாளில் நான் வேண்டும்  
வாழ்நாளில் நான் வேண்டும் பேரின்பமே
தேனாகுமே வானின் தெய்வீகமே
மண்ணோடு நான் முடியுமுன்னமே
உன்னோடு ஒன்றாதல் பேறாகுமே

என்றென்றுமே தேவன் முன்பாகவே
குன்றாமலே தீபம் நானாகவே
என் வேண்டல் உன் அன்புத் தீயாகவே
என் பாவம் வெந்த பலியுமாகவே

நீயின்றியே நெஞ்சம் நீராகினேன்
நின் உண்மைக்கே உள்ளம் மாறாகினேன்
யார் வேண்டுவார் என்று போராடினேன்
நீரென்றே பலியில் ஒன்றாகினேன்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்