876-வருவாய் வருவாய் |
வருவாய் வருவாய் என் இயேசுவே வளமே என் நெஞ்சில் தருவாய் தருவாய் என்றென்றும் பலமே என் இயேசுவே - 2 தெரியாத் தூரத்தில் கானல்கள் பார்த்து மாயையில் மதி இழந்தேன் புரியாத ராகத்தில் வீணைகள் மீட்டி சோகத்தில் உயிர் வளர்த்தேன் நான் அறியாப் பிள்ளை அருளில் வளர உன்னிடம் வருகின்றேன் உன் உடல் உண்டு நலம் பல பெற்று நல்வழி நான் நடப்பேன் பண்ணிசைபாடி உன் புகழ் கூறி ஆன்மா ஒன்று என்னுள்ளே இன்று பசியால் தவிக்கின்றது மேன்மை பொருந்திய இதயத்தில் இன்று சோர்வுகள் தெரிகின்றது - நான் ஒன்றும் அறியாப் பச்சிளங் குழந்தை பாவத்தில் தவழ்கின்றேன் உன் இரத்தம்; பருகி உடல் பலம் பெற்று நல்வழி நான் நடப்பேன்... |