Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   874-வருகிறார் என் தெய்வம்  


வருகிறார் என் தெய்வம்
பெருகும் இன்பம் தருகின்றார்
தன்னை முழுவதும் உண்டு மகிழ
உண்ணும் உணவில் மறைந்து மகிழ்ந்து

எண்ணில்லாத ஆனந்தம்
என் இதயம் வந்தால் ஆரம்பம்
என்னில் விளையும் பேரின்பம்
விண் வாழ்வு காண மலர்ந்திடும்
என் ஆயன் அன்பு இறைவன் மந்தை
ஒன்றி வாழச் சேர்க்கும் எந்தை

நீயில்லாத நாட்களாம்
என் நினைவைக் கொல்லும் வாட்களாம்
நீதி மணக்கும் பூக்களாம் என் நெஞ்சில்
என்றும் நீக்கமாம் - என் வாழ்வு
மலர்ந்து மறுமை காண
என்றும் உம்மில் அமைதிகாண


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்