Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   873-வரவேற்பேன் இறைவா  


வரவேற்பேன் இறைவா - நீ
வரவேண்டும் என்று அழைக்கின்றேன் - நீ
வரவேண்டும் என்று அழைக்கின்றேன்

தாளத்தில் அதிர்ந்த ரூபகனை - எக்
காலத்தில் வளர்ந்த கான் மழையை (2)
இராகத்தில் மலர்ந்த மோகனனை - 2
எந்தன் தேகத்தில் இணைப்பேன்
இசையமுதாய் (2)

அன்னை பாடிய தாலாட்டில் - என்
தந்தை அருளிய அறிவுரையில் (2)
பொன் மொழிப் போதகர் அறிவுரையில் - 2
இறை நாதத்தின் கீதத்தொனி கேட்டேன் - 2

மலர்க்கை குழவியின் கனிமொழியில் - ஒரு
மாங்குயில் இசைக்கும் பண் வளியில் (2)
வலம்புரிச் சங்கின் இசைமயத்தில் - 2
அருள் வாசகன் இசைக்கடல் அமுதுண்டேன் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்