Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 திருவிருந்துப்பாடல்கள்

   872-வசந்த இராகம் பாடுவோம்  


வசந்த இராகம் பாடுவோம் - இந்த
புனிதமான விருந்திலே
ஆனந்த கீதங்கள்
பாடிப் போற்றுவோம் - நாம்

விண்வெளி போற்றிப் பாடும் எந்தன் மன்னன் வருகையில்
காற்றும் இராகம் பாடும் எந்தன் இதயம் எழுகையில்
கடல் அலைகள் கவிபாடும் எந்தன் மீட்பர் புகழினை
அவரன்பு நம்மைக் காக்கும் அவரைப் போற்றுவோம் - நாம்

தண்ணொளி வீசும் நிலவும் எந்தன் இனிய இயேசுவை
பாய்ந்து ஓடும் நதியும்தன்தைப் படைத்த தேவனை
உறைபனியும் தென்றல் காற்றும் இங்கு இணைந்து பாடுமே
அவர் வரவால் உள்ளம் நிறைந்து அவரைப் போற்றுவோம் - நாம்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்