870-முத்தமிழ் தலைவன் |
முத்தமிழ் தலைவன் மூவொரு இறைவன் எழுந்து வருகின்றார் என் எண்ணத்தில் எழுந்து சிந்தையில் கலந்து இனிமை பொழிகின்றார் வாழ்வினை இழந்து தாழ்வினில் உழன்ற உள்ளத்தில் உறைகின்றார் - அங்கு வறட்சிறை நீக்கி வளமையை ஈந்து வாழ்வாய் மாற்றுகின்றார் எண்ணில்லாத அருளினாலே - என்றும் என்னை ஆளுகின்றார் - என் இறைவன் வருகின்றார் பாவத்தின் பிடியில் தவித்திடும் நிலையில் பாவியைத் தேடி வந்தார் - தன் உடலையே கொடுத்து விடுதலை அளித்து உயிராய் மாற்றுகின்றார் எல்லையில்லா அன்பினைப் பொழிந்து என்னைக் காக்கின்றார் - என் இறைவன் வருகின்றார் |