867-மன்னவா மன்னவா உணவாய் |
மன்னவா மன்னவா உணவாய் உள்ளத்தில் வா மன்னவா மன்னவா உயிராய் என்னில் நீ வா வார்த்தை வடிவில் வளம் தர வா - மன இருளதை அகற்றி ஒளிதர வா என்னில் உன்னை இணைத்திட வா உறவில் என்றும் நனைத்திடவா நீயே! என்னுள் உறைந்திட வா பாவத்தால் வரண்ட இதயத்தில் வா - மன தாபத்தைத் தணித்திடும் விருந்தென வா பாலை நிலமதில் மலரென வா பாறை வாழ்வதில் நீரென வா நீயே! உயிர் தரும் ஊற்றென வா காற்றினில் கரைந்திடும் இசையென வா -பெரும் கடலினில் கரைந்திடும் நதியென வா அப்பத்தின் வடிவில் அன்பனே வா அமைதியும் அருளும் பகிர்ந்திட வா நீயே! முடிவில்லா வாழ்வாய் வா |