865-மழலை இதயம் நாடி வருவோர் |
மழலை இதயம் நாடி வருவோர் எனைவிழைவீரோ -இசைக் குழலின் ஒலியில் மயங்குவோரே பேச வருவீரோ மானைப்போலத் தவித்து நிற்கும் இதயம் பாரீரோ தேனைப்போல அருள் சுரந்து தேற்ற வாரீரோ குழந்தைபோல பேச எனக்கு இதயமில்லையே மழலைச் சொல்லும் நாட்களாக மறந்து போனதே 2 இளமைப் பொலிவில் இதயம் தானும் இறுகிப்போனதோ 2 வளமை சேர்க்கும் உனை மறந்து மயங்கிப்போனேன் பாவி என்னைப் பார்த்து பார்த்து பரிதவிக்கின்றீர் மேவி மேவி அழைத்து அன்பு செய்கின்றீர் - 2 தவழ்ந்து தவழ்ந்து தேடி தேவா உன்னை அடைந்துள்ளேன் - 2 மகிழ்ந்து என்னை ஏற்றுப் பாவ பொறுத்தல் அளிப்பீரோ பாவச் சேற்றில் வாழ்ந்த நாட்கள் போதும் போதுமே நோகச் செய்த வினைகள் யாவும் தீரும் தீருமே 2 தேவா உன்னை இறுக அணைத்து அன்பில் மகிழ்கின்றேன் - 2 நாவால் உன்னை வாழ்த்தி வாழ்த்தி மகிழ்ந்து மடிகின்றேன் |