864-மலரென மனதினைத் |
மலரென மனதினைத் திறந்து வைத்தேன் - அதில் மனமென இணைந்திட உனை அழைத்தேன் உளமெனும் அகலினில் உனை வளர்த்தேன் - அங்கு உயர்ந்திடும் சுடரினில் உனை அறிவேன் பால் நிறம் படைத்த என் மழலை உள்ளம் - வீணே கார் நிழல் கொண்டது காலத்தினால் - 2 காவலா கள்ளமெல்லாம் கழித்து - இன்று கோலமிடும் உந்தன் திருவுருவை - 2 அகத்தினில் ஆலயம் அமைத்திடுவேன் - அங்கு உகந்ததோர் பலியினை நடத்திடுவாய் - 2 தலைவனே உள்ளமெல்லாம் நிறையும் - உந்தன் பலியுடன் கலந்து யான் உயர்ந்திடுவேன் - 2 |