861-பூம்புனல் அருகே |
பூம்புனல் அருகே அசைந்திடும் நாணல் பாங்குற செழிந்து வளர்வது போல இயேசுவே உந்தன் வரவினால் நானும் இம்மையில் உயர்வேன் மறுமைக்கு வாழ்வேன் வான் மழையே தேன் சுவையே தேவனின் திருவிருந்தே உலகின் அன்பை தேடி அலைந்து உள்ளம் சோர்ந்துவிட்டேன் உன் உயர் அன்பை சுவைத்திட நாளும் என்னிடம் எழுந்தே வாராயோ மதுரச் சுவையே கதிதரு கவிதைச் சரமே உனதுரு தினமும் தொழவே பணிபுரிந்திடுவேன் வருவேன் உனதடி கானல் நீரைத் தேடி நானும் காலம் போக்கிவிட்டேன் காணும் தெய்வம் நீயே வாராய் ஆளும் என்னை என்றும் நீயே மதுரச் சுவையே கதிதரு கவிதைச் சரமே உனதுரு தினமும் தொழவே பணிபுரிந்திடுவேன் வருவேன் உனதடி |