860-புதுயுகம் காண புறப்படும் |
புதுயுகம் காண புறப்படும் நமக்கு புத்துணர்வூட்டும் விருந்து - நம் பயணத்தின் பாதை நெடுகிலும் - நெஞ்சில் ஊக்கமளித்திடும் விருந்து (2) இனிய விருந்து இதய விருந்து இயேசு விருந்து அன்பின் விருந்து (2) பகிர்ந்து வாழும் பண்பினை உலகில் போற்றி வளர்க்கும் விருந்து - இது பரிவுடன் அயலார் சுமையினைத் தாங்கும் பக்குவம் தருகின்ற விருந்து (2) இனிய விருந்து.... உடைந்து போன உறவுகள் மீண்டும் உயிர் பெறச் செய்யும் விருந்து - இது பிறரது தவறை மன்னித்து வாழும் பெருங்குணம் அளிக்கும் விருந்து (2) இனிய விருந்து... அன்புடன் இறைவனை அப்பா என்று அழைத்து மகிழும் விருந்து - இது அனைவரும் அவரது பிள்ளைகள் என்ற ஆனந்த நிலை காணும் விருந்து (2) இனிய விருந்து... |