859-புது இதயம் ஒன்று தாரும் |
புது இதயம் ஒன்று தாரும் என் இறைவா புது வாழ்வாய் அது மாறும் என் தலைவா நான் தேடினேன் புது உலகம் - 2 அதைக் காணத்தான் புது இதயம் - 2 கள்ளம் கபடம் இல்லாப் பிள்ளை உள்ளம் பொய்யும் புரட்டும் இல்லா வெள்ளையுள்ளம் பேரும் புகழும் தேடா எளிய மனம் எல்லோருக்கும் நன்மை எண்ணும் ஏற்றங்கள் தேடும் நெஞ்சம் நலிந்தோருக்கும் வலியோருக்கும் நல்வழி காட்டும் நெஞ்சம் புது இதயம் - புதுவாழ்வு - புது உலகம் இறைவா - 2 ஆணவம் அகந்தை இல்லா எளிய மனம் ஆண்டவன் விருப்பம் நாடும் பணிந்த மனம் அடிமை அச்சம் இல்லா வீர நெஞ்சம் இலட்சிய நோக்கம் கொண்ட உறுதி உள்ளம் உன்னதத்தின் உணர்வெல்லாம் என்னவை ஆக வேண்டும் உன் இதயக் கனவெல்லாம் என் நெஞ்சம் காணவேண்டும் புது இதயம் - புதுவாழ்வு - புது உலகம் இறைவா - 2 |